×

மாசிமகா சிவராத்திரி திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம் குலதெய்வம் தெரியாதவர்கள் இங்கு வழிபடலாம்

தேவதானப்பட்டி, மார்ச் 11: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மாசிமகா சிவராத்திரி திருவிழா இன்று மாலை கோலாகலமாக தொடங்க உள்ளது. தேவதானப்பட்டிக்கு வடக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் மஞ்சளாற்றின் நதிக்கரையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகா சிவராத்திரி திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். சிவராத்திரி திருவிழாவிற்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி முகூர்த்தால் ஊன்றப்பட்ட நிலையில், இன்று மாலை விழா தொடங்குகிறது.  மார்ச் 18ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு இருந்து வருவதால் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அக்னி சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில், அங்க பிரதச்சணம் செய்ய, தேங்காய் பழம் நிவேதனம் மற்றும் இரவில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Tags : Masimaka Shivaratri festival ,
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்